மத்தியபிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது - ரெயில் போக்குவரத்து பாதிப்பு


மத்தியபிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது - ரெயில் போக்குவரத்து பாதிப்பு
x

கோப்புப்படம்

மத்தியபிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது. இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜபல்பூர்,

மத்தியபிரதேச மாநிலம் நரசிங்கபூர் மற்றும் கரேலி ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு சரக்கு ரெயில் தடம் புரண்டது. நல்லவேளையாக, இச்சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை.

விபத்தை தொடர்ந்து, இடார்சி-ஜபல்பூர் ரெயில் பாதையில் செல்ல வேண்டிய ரெயில்கள், வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. ஜபல்பூர்-இடார்சி ரெயில் பாதையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 10 மணி நேரத்துக்கு பிறகு, நேற்று காலை போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

1 More update

Next Story