மனைவியை தனது சிறுநீரை குடிக்குமாறு வற்புறுத்திய கணவர் கைது: வீடியோவோடு புகார் அளித்ததால் அதிர்ச்சி அடைந்த போலீசார்...!


மனைவியை தனது சிறுநீரை குடிக்குமாறு வற்புறுத்திய கணவர் கைது: வீடியோவோடு புகார் அளித்ததால் அதிர்ச்சி அடைந்த போலீசார்...!
x
தினத்தந்தி 18 July 2023 9:12 PM IST (Updated: 18 July 2023 9:15 PM IST)
t-max-icont-min-icon

மத்தியப் பிரதேசத்தில் தனது கணவர் தன்னை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாக மனைவி புகாரித்த நிலையில், அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

மத்தியப் பிரதேசத்தின் செஹூரில் பெண் ஒருவர், தனது கணவர் தன்னை சிறுநீர் குடிக்க வற்புறுத்தியதாகவும், உடல் ரீதியாகத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அந்த பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் கூறுகையில் 'அவர் என்னை அடித்து சிறுநீர் குடிக்க வைத்தார். எனக்கு நீதி வேண்டும். நான் கடந்த காலத்தில் நிறைய கஷ்டப்பட்டேன் ஆனால் இதுவரை புகார் செய்யவில்லை. ஒருமுறை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார், ஆனால் நான் எதுவும் சொல்லவில்லை.

இருப்பினும், இந்த சம்பவம் என் சுயமரியாதையை புண்படுத்தியுள்ளது. எனது கோரிக்கையை யாரும் கேட்கவில்லை என்றால், நான் முதல்-மந்திரியிடம் பேசி நியாயம் கேட்பேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பூஜா ராஜ்புத், காவல்நிலைய அதிகாரி கூறுகையில்,

கணவர் தன்னைத் தாக்கியதாக அந்தப் பெண் புகார் அளித்ததோடு, அந்தச் சம்பவத்தை வீடியோவும் எடுத்துள்ளார். புகாரின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story