மராட்டியத்தில் லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து - 7 பெண்கள் உட்பட 10 பேர் பலி
மராட்டியத்தில் சின்னார் ஷீரடி நெடுஞ்சாலையில் லாரி மீது சொகுசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
நாசிக்,
மராட்டிய மாநிலம் சின்னார் ஷீரடி நெடுஞ்சாலையில் லாரி மீது சொகுசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் இருந்து 50 பயணிகளுடன் புறப்பட்ட சொகுசு பஸ் ஒன்று ஷீரடி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் நாசிக்கின் பத்தரே கிராமத்திற்கு அருகே வந்து கொண்டிருந்த போது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சின்னாரில் உள்ள கிராம மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.