மராட்டியம்: சரக்கு ரெயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன; ரெயில் சேவை பாதிப்பு


மராட்டியம்:  சரக்கு ரெயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன; ரெயில் சேவை பாதிப்பு
x

நீண்டதொலைவு செல்ல கூடிய 7 பயணிகள் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

புனே,

மராட்டியத்தின் கசரா நகரருகே சரக்கு ரெயில் ஒன்றின் 7 பெட்டிகள் இன்று திடீரென தடம் புரண்டன. இதனை தொடர்ந்து, கல்யாண் ஸ்டேசன் சாலை விபத்து நிவாரண ரெயில் மற்றும் இகத்புரி ஸ்டேசன் விபத்து நிவாரண ரெயில் ஆகிய 2 ரெயில்கள், விபத்து நடந்த பகுதிக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது என மத்திய ரெயில்வேயின் செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.

இதனால், மும்பையில் இருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மும்பையில் இருந்து அடிலாபாத் நந்திகிராம் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய 2 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும், மும்பை புறநகர் ரெயில் சேவையில் பாதிப்பில்லை. நந்தி எக்ஸ்பிரஸ், மன்மத் பஞ்சவதி எக்ஸ்பிரஸ் உள்பட நீண்டதொலைவு செல்ல கூடிய மொத்தம் 7 பயணிகள் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.


Next Story