குஜராத் சட்டசபை தேர்தல்: மராட்டியத்தில் 1 நாள் ஊதியத்துடன் விடுமுறை - ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு


குஜராத் சட்டசபை தேர்தல்: மராட்டியத்தில் 1 நாள்  ஊதியத்துடன் விடுமுறை - ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு
x

குஜராத் மாநில எல்லையை ஒட்டியுள்ள மராட்டிய மாநில பகுதிகளுக்கு மட்டும் குஜராத்தில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் தேர்தல் நடைபெறும் நாட்களில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

27ஆண்டுகளாக பாஜக ஆளும் குஜராத்தில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 5ஆம் தேதி என இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

இதில், முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் என மொத்தமாக 182- தொகுதிகளுக்கும் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

வழக்கமாக தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் அரசு விடுமுறை விடுவது வழக்கம். ஆனால், இங்கு மராட்டிய மாநிலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, குஜராத் மாநில எல்லையினை ஒட்டியுள்ள மராட்டிய மாநில பகுதிகளுக்கு மட்டும் குஜராத்தில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் தேர்தல் நடைபெறும் நாட்களில் மட்டும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.


Next Story