பெண் தோழியை கவர விலையுயர்ந்த பைக்குளை திருடிய இளைஞர் கைது - 13 பைக்குகள் மீட்பு


பெண் தோழியை கவர விலையுயர்ந்த பைக்குளை திருடிய இளைஞர் கைது - 13 பைக்குகள் மீட்பு
x

மராட்டியத்தில் பெண் தோழியை கவர விலையுயர்ந்த பைக்குளை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தானே,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியில் விலையுயர்ந்த பைக்குகளை திருடிய 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அந்த இளைஞரிடமிருந்து 13 பைக்குகளை மீட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட சுபம் பாஸ்கர் பவார் என்ற இளைஞர் தன்னுடைய பெண் தோழியை கவர விலையுயர்ந்த பைக்குகளை திருடியதாக கூறப்படுகிறது. திங்கள் கிழமை அவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் லத்தூர், சோலாப்பூர் மற்றும் புனே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ரூ.16.05 லட்சம் மதிப்புள்ள 13 திருடப்பட்ட பைக்குகளை போலீசார் மீட்டனர். மேலும் இது தொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story