வீட்டு முகப்பில் இருந்து மற்றொரு வீட்டுக்கு பறந்து செல்லும் ஆண் மயில்; வைரலான வீடியோ


வீட்டு முகப்பில் இருந்து மற்றொரு வீட்டுக்கு பறந்து செல்லும் ஆண் மயில்; வைரலான வீடியோ
x

டெல்லியில் நகர பகுதியில் ஆண் மயில் ஒன்று வீட்டின் மேல் பகுதியில் இருந்து மற்றொரு வீட்டுக்கு பறந்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.



புதுடெல்லி,



டெல்லியில் நகர பகுதிகளில் பறவைகள் காணப்படுவது மிகவும் அரிது. அதிகரித்து வரும் காற்று மாசு, வாகன நெருக்கடி ஆகியவற்றால் பொதுமக்களே அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொள்ள கூடிய சூழல் காணப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லியின் நகர பகுதியில் விகாஸ்புரி என்ற இடத்தில் அமைந்த வீடு ஒன்றிற்கு மயில்கள் பல வருகை தந்துள்ளன. இதுபற்றிய காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை சபர்நாமபிநிதி என்பவர் வெளியிட்டு உள்ளார்.

அதில், டெல்லி போன்ற நகரங்களில் மயில்களை காண்பதே அரிது. இந்த பகுதியில் நான் 10 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் மே மாத இறுதியில் மயில்கள் வருவது வழக்கம். அவை அக்டோபர் வரை இந்த பகுதிகளில் வசிப்பது வழக்கம் என தெரிவித்து உள்ளார்.

நான் இந்த மயிலை கடந்த 10 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். அது மிக அழகாக இருக்கிறது என பதிவிட்டு உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் ஆண் மயில் ஒன்று வீட்டின் மேல் தளத்தில் முகப்பு பகுதியில் ஏறி நிற்கிறது.

அதன் பின்னர் அந்த பகுதியை பார்வையிட்டபடி, மற்றொரு நபரின் வீட்டு முகப்பு பகுதிக்கு பறந்து செல்கிறது. டெல்லியை சுற்றிய பகுதிகளில் மயில்கள் காணப்படுவது அரிது என கூறுவதுடன், பறக்கும் மயிலை காண்பது இன்னும் அரிது எனவும் கூறப்படுகிறது.

இந்த வீடியோவை 48 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். 5.25 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். நெட்டிசன்களும் ஆச்சரியத்துடன் தங்களது விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர்.




Next Story