ஜி-20 மாநாட்டுக்கு அழைப்பு இல்லாமல் பங்கேற்க முடியுமா?; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி


ஜி-20 மாநாட்டுக்கு அழைப்பு இல்லாமல் பங்கேற்க முடியுமா?; காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி
x

ஜி-20 மாநாட்டுக்கு அழைப்பு இல்லாமல் பங்கேற்க முடியுமா? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

கலபுரகி:

ஜி-20 மாநாட்டுக்கு அழைப்பு இல்லாமல் பங்கேற்க முடியுமா? என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

கலபுரகியில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களிடம் கூறியதாவது:-

கொள்கை மாற்றம்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்க இருப்பது பற்றி அறிந்துள்ளேன். பிரதமர் மோடியும், தேவேகவுடாவும் கைகளை பிடித்து கொண்டு செல்வதையும் டி.வி.யில் பார்த்தேன். 2 கட்சிகளும் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தொகுதி பங்கீடு இதுவரை நடந்தவாறு தெரியவில்லை. ஜனதாதளம் (எஸ்) கட்சி தனது கொள்கையை மாற்றி கொள்வது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை.

ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் ஆரம்பத்தில் இருந்தே மதசார்பற்றவர்கள் என்று கூறிவருகின்றனர். நான் அரசியலில் மதத்தை திணிக்க விரும்புவதில்லை. நாடாளுமன்ற தேர்தலை 28 கட்சிகள் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள உள்ளது. நாடு முழுவதும் 60 சதவீத வாக்குகளை பெற இந்தியா கூட்டணி இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே 3 கூட்டங்கள் நடந்துள்ளது. 4-வது கூட்டமும் வடமாநிலத்திலேயே நடக்க உள்ளது.

அழைப்பு இல்லாமல் பங்கேற்க...

இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. 60 சதவீத வாக்குகள் பெறுவதற்காக இலக்கு நிர்ணயித்து ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். சனாதன தர்ம விவகாரத்தில் அரசியலை கொண்டு வரக்கூடாது. நாம் அனைவரும் ஒன்று என்று இருக்க வேண்டும். சனாதன தர்ம விவகாரத்தில் எதிராளிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும்படி பிரதமர் மோடி கூறி இருக்கிறார்.

அதன் அர்த்தம் என்ன?. இதுபோன்ற அரசியலை நாங்கள் செய்யவில்லை. ஜி-20 மாநாடு டெல்லியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காதது குறித்து நீங்கள் (நிருபர்கள்) கேட்கிறீர்கள். ஜி-20 மாநாட்டுக்கு எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. மாநாட்டில் அழைப்பு இல்லாமல் பங்கேற்க முடியுமா?. இதுபோன்ற அரசியலில் யாரும் ஈடுபடக்கூடாது.

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.


Next Story