மம்தா பானர்ஜி நலமுடன் உள்ளார்.. மருத்துவர்கள் தகவல்


மம்தா பானர்ஜி நலமுடன் உள்ளார்.. மருத்துவர்கள் தகவல்
x
தினத்தந்தி 16 March 2024 6:44 AM GMT (Updated: 16 March 2024 8:01 AM GMT)

மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, கீழே விழுந்ததில் அவரது நெற்றி மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது.

கொல்கத்தா,

மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, அவரது வீட்டில் நேற்று முன்தினம் கீழே விழுந்தார். இதில் அவரது நெற்றி மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நெற்றி மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில், நெற்றியில் தையல் இடப்பட்டது. தொடர்ந்து அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட ஆய்வுகள் செய்யப்பட்டதில், அவரது நினைவாற்றலுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் அவரது உடல்நிலை மற்றும் மனநிலை சீராக உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மம்தா பானர்ஜி தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மம்தா பானர்ஜியின் உடல்நிலை குறித்து மூத்த மருத்துவர் ஒருவர் கூறியதாவது;

"முதல் மந்திரி நலமுடன் உள்ளார். காயங்களால் ஏற்பட்ட வலியும் வெகுவாக குறைந்துள்ளது. இரவில் நன்றாக தூங்கினார். தொடர்ந்து அவர் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story