பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி


பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 1 March 2024 5:33 PM IST (Updated: 1 March 2024 5:45 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் பல்வேறு அரசுத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ஹுக்ளி மற்றும் நாடியா மாவட்டங்களில் இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். பல்வேறு அரசுத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமர் மோடி கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று இரவு தங்க உள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆளுநர் மாளிகைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெறிமுறைப்படி இந்த சந்திப்பு நடைபெறுகிறது. ஆனால் சந்திக்கும் நேரம் குறித்து எந்த தகவலும் இல்லை எனத் தெரியவந்ததுள்ளதாக ஆளுநர் மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்தாண்டு டிசம்பரில், மம்தா பானர்ஜி புதுடெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து மாநிலத்தின் நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்தினார். மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசு ரூ.1.18 லட்சம் கோடி பாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story