ஜி20 மாநாடு: இரவு விருந்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார் மம்தா பானர்ஜி


ஜி20 மாநாடு: இரவு விருந்தில் பங்கேற்க டெல்லி செல்கிறார் மம்தா பானர்ஜி
x

ஜி20 மாநாட்டின் இரவு விருந்தில் பங்கேற்க மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று பிற்பகல் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

கொல்கத்தா,

இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

நாளை (9ம் தேதி) ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், உள்நாட்டு தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

உலகத் தலைவர்களின் ஜி20 உச்சி மாநாடு பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்தநிலையில் முர்முவின் அழைப்பை ஏற்று இரவு விருந்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று பிற்பகல் டெல்லிக்கு செல்கிறார். தேசிய தலைநகருக்கு செல்லும் மம்தா பானர்ஜி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். மேலும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து, அவருடன் நல்லுறவைப் பகிர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story