திருமணம் குறித்து ஏற்பட்ட சண்டையில் பெண் தோழியை கொலை செய்த நபர் கைது
திருமணம் குறித்து ஏற்பட்ட சண்டையில் 20 வயது பெண் தோழியை கொலை செய்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையில் திருமணம் குறித்து ஏற்பட்ட சண்டையில் 20 வயது பெண் தோழியை கொலை செய்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி அங்கிதா எஸ் ஷிவ்கன் என்ற பெண் தெற்கு மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காணாமல் போனார். சில நாட்களுக்குப் பிறகு மும்பையின் புறநகர்ப் பகுதியில் உள்ள பயந்தரில் உள்ள உத்தான் மரைன் காவல் நிலைய எல்லையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவரது செல்போன் அழைப்பு பதிவுகளை ஆய்வு செய்ததில், விரார் பகுதியைச் சேர்ந்த அவரது ஆண் நண்பர் அபிஷேக் சர்பரே என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அபிஷேக், அங்கிதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
திருமணம் குறித்து அவர்களுக்குள் பெரிய சண்டை ஏற்பட்டுள்ளது. அங்கிதா அவரை மிரட்டியுள்ளார். இதையடுத்து அவரை கொலை செய்ய அபிஷேக் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் ஜூலை 31 அன்று, இருவரும் பால்கர் மாவட்டத்தில் உள்ள பயந்தருக்குச் சென்றனர். அங்கு அபிஷேக், அங்கிதாவை ரெயில் பாலத்தில் இருந்து சிற்றோடைக்குள் தள்ளி கொலை செய்துள்ளார்.