உ.பி: வேகமாக வந்த ஆம்புலன்ஸ் பைக் மீது மோதியதில் ஒருவர் உயிரிழப்பு: மூவர் காயம்


உ.பி: வேகமாக வந்த ஆம்புலன்ஸ் பைக் மீது மோதியதில் ஒருவர் உயிரிழப்பு: மூவர் காயம்
x

உத்தரப்பிரதேசத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் பைக் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் பைக் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) அகிலேஷ் நாராயண் கூறுகையில், மோட்டார் சைக்கிளில் சென்ற இரு சகோதரர்கள் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மீது மோதியுள்ளனர். சகோதரர்களில் ஒருவரான ஆயுஷ் வர்மா இறந்தார். மற்றவர் பலத்த காயமடைந்தார்.

மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியும் ஆம்புலன்ஸ் மீது மோதி பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


Next Story