உ.பி.: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை
உத்தரபிரதேசத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கோபிகஞ்ச் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமி ஒருவர் அஜய் குமார் யாதவ் என்ற 20 வயது நபரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கோபிகஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் அஜய் குமார் யாதவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒரு சிறப்பு போக்சோ நீதிமன்றம் 22 வயது நபருக்கு 20 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மேலும், குற்றவாளிக்கு நீதிபதி ரூ.33 ஆயிரம் அபராதம் விதித்தார். அதில் ரூ.25 ஆயிரம் பாதிக்கப்பட்டவருக்குச் செல்லும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story