துக்க நிகழ்ச்சிக்கு வந்தபோது விபரீதம்: மனைவியின் மூக்கை அறுத்த கணவர்


துக்க நிகழ்ச்சிக்கு வந்தபோது விபரீதம்:  மனைவியின் மூக்கை அறுத்த கணவர்
x

குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து மனைவி தனியாக வசித்து வருகிறார்.

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார். இவர் போத்தன்கோடு பஞ்சாயத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவருடைய மனைவி சுதா (வயது 48). கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சுதா தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

மேலும் வீடுகளில் வேலை செய்து குழந்தைகளை கவனித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சுதா சென்றார். இதையறிந்து அங்கு வந்த அனில்குமார் மனைவியுடன் தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அனில்குமார், தான் வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்த முயன்றார்.

அப்போது சுதாவின் மூக்கில் கத்தி பட்டு படுகாயம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அனில்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மூக்கு அறுபட்ட நிலையில் சுதா திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போத்தன் கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அனில்குமாரை தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story