மகள்களை கோடாரியால் வெட்டிக்கொன்ற தந்தை - தடுக்கவந்த மனைவி, மருமகள் மீதும் தாக்குதல்


மகள்களை கோடாரியால் வெட்டிக்கொன்ற தந்தை - தடுக்கவந்த மனைவி, மருமகள் மீதும் தாக்குதல்
x

தாக்குதலை தடுக்க வந்த மனைவி மற்றும் மருமகள் மீதும் கோடாரியால் அவர் தாக்கியுள்ளார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் நாகூர் மாவட்டம் பர்பட்சர் கிராமத்தை சேர்ந்தவர் மணராமன் (வயது 57). இவருக்கு மனைவி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

இதனிடையே, மணராமன் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட நிலையில் இருந்துள்ளார். 2 மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது. மகனுக்கும் திருமணமாகி மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், 2 மகள்களும் நேற்று தனது தந்தை மணராமன் வீட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் இரவு ஒரு அறையில் உறங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது, மகன் படுத்திருந்த அறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிய மணராமன் தான் வைத்திருந்த கோடாரியால் தூங்கிக்கொண்டிருந்த 2 மகள்களையும் சரமாரியாக வெட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த 2 மகள்களும் அலறி துடித்தனர்.

மகள்களின் அலறல் சத்தம் கேட்ட மணராமனின் மனைவி மற்றும் மருமகள் அவரை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களையும் மணராமன் கோடாரியால் தாக்கினார். மணராமன் தாக்குதல் நடத்திய நிலையில் அவரது மகன் அறைக்குள் பூட்டப்பட்டதால் அவரால் தந்தையை தடுக்க முடியவில்லை.

தந்தை கோடாரியால் கொடூரமாக தாக்கியதில் 2 மகள்களும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய மணராமன் வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்த தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்தவர்களிஅ மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 மகள்களை கோடாரியால் வெட்டிக்கொன்றுவிட்டு தப்பியோடிய மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story