மனைவி, மாமியாரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற நபர்


மனைவி, மாமியாரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற நபர்
x

மனைவி, மாமியாரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ள்னார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ரஜோரி மாவட்டம் டார்யங் கிராமத்தை சேர்ந்தவர் காஷ்மீர் சிங் (25). இவரது மனைவி பிரியங்கா (22) மாமியார் சாந்தோ தேவி.

இதற்கிடையில், காஷ்மீர் சிங்கிற்கும் அவரது மனைவி பிரியங்காவிற்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப ரீதியில் பிரச்சினை நிலவி வந்தது.

இந்நிலையில், கணவன் - மனைவி இடையே நேற்று மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது. அப்போது, வீட்டில் காஷ்மீர் சிங்கின் மாமியார் சாந்தோ தேவியும் உடன் இருந்துள்ளார். வாக்குவாதம் நீடித்த நிலையில் ஆத்திரமடைந்த காஷ்மீர் சிங் தனது மனைவி பிரியங்காவை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கினார். தடுக்க முயன்ற மாமியார் சாந்தோ தேவியையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் பிரியங்கா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

படுகாயமடைந்த சாந்தோவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாமியார் சாந்தோ தேவியும் உயிரிழந்தார்.

மனைவி மற்றும் மாமியாரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற காஷ்மீர் சிங்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story