மங்களூரில் ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு கழுதை பால் பண்ணை தொடங்கிய நபர்..!


மங்களூரில் ஐடி வேலையை ராஜினாமா செய்துவிட்டு கழுதை பால் பண்ணை தொடங்கிய நபர்..!
x
தினத்தந்தி 16 Jun 2022 6:08 AM GMT (Updated: 16 Jun 2022 6:26 AM GMT)

மங்களூருவை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் கவுடா என்பவர் கழுதை பால் பண்ணை திறப்பதற்காக ஐடி பணியை ராஜினாமா செய்துள்ளார்.

மங்களூரு,

ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மங்களூருவை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் கவுடா என்பவர் கழுதை பால் பண்ணை திறப்பதற்காக தன்னுடைய ஐடி பணியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது 42 லட்சம் ரூபாய் முதலீட்டில், 20 கழுதைகளுடன் மங்களூரில் கழுதை பால் பண்ணை திறந்து கழுதை பால் விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து ஸ்ரீனிவாஸ் கவுடா கூறியதாவது:-

"நான் 2020 வரை மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். தற்போது மங்களூரில் கழுதை பால் பண்ணை தொடங்கியுள்ளேன். இது இந்தியாவிலும் கர்நாடகாவிலும் முதல் கழுதை வளர்ப்பு மற்றும் பயிற்சி மையமாகும். கழுதை இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த யோசனை செய்தேன். கழுதைப்பண்ணை பற்றிய யோசனையை மக்கள் ஆரம்பத்தில் நம்பவில்லை.

எங்களிடம் 20 கழுதைகள் உள்ளன. சுமார் 42 லட்சம் ரூபாய் இதில் முதலீடு செய்துள்ளேன். அதிக நன்மைகள் கொண்ட கழுதைப்பாலை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும் மருந்து கலவையான கழுதை பால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் கனவு.

மால்கள், கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இந்த கழுதை பால் பாக்கெட்டுகள் கிடைக்கும். ஏற்கனவே 17 லட்சம் மதிப்புள்ள ஆர்டர்கள் கிடைத்துள்ளன" என்று கூறினார்.


Next Story