ஓட்டலில் மனைவி உடன் இருந்த ஆண் நண்பரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட நபா்


ஓட்டலில் மனைவி உடன் இருந்த ஆண் நண்பரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்ட நபா்
x

இமாச்சலப் பிரதேசம், மணாலியில் உள்ள ஓட்டலில் டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் நண்பரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாா்.

சிம்லா,

இமாச்சலப் பிரதேசம், மணாலிக்கு டெல்லியை சோ்ந்த 2 பெண்கள் சுற்றுலா வந்துள்ளனா். அங்குள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனா். அந்த பெண்களில் ஒருவர் தனது ஆண் நண்பரை ஓட்டலுக்கு வரவழைத்துள்ளாா். அந்த பெண்ணின் ஆண் நண்பரும் ஓட்டலுக்கு வந்துள்ளாா்.

இந்த நிலையில், அந்த பெண் இருந்த ஓட்டலுக்கு பெண்ணின் கணவன் தீடீரென வந்துள்ளாா். அங்கு தனது மனைவியுடன் ஆண் நண்பா் இருந்ததை பார்த்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவா் தனது கைதுப்பாக்கியால் தனது மனைவி மற்றும் அவரது ஆண்நண்பரை சுட்டுள்ளாா். பின் தன்னைத்தானே சுட்டுக்கொண்டாா்.

இதில், துப்பாக்கியால் சுட்ட நபா் மற்றும் அவரது மனைவியின் ஆண்நண்பா் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிாிழந்தனா். இந்த துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த அவாின் மனைவியை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து ஓட்டல் நிா்வாகம் சாா்பில் போலீசாருக்கு தகவல் தொிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவ இடத்தில் தடயவியல் துறை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினா்.

போலீசாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கி சுட்டில் உயிாிழந்த நபாின் பெயா் சன்னி என்பதும், அவரும் ,அந்த பெண்ணும் சேர்ந்து டெல்லியில் ஓட்டல் நடத்தி வருவது தொியவந்தது.

1 More update

Next Story