இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கோப்புப்படம்
இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தூர்,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதியுடன் அவரது யாத்திரை ஸ்ரீநகரில் நிறைவு பெற்றது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் யாத்திரை சென்றபோது ராகுல் காந்தி மற்றும் கமல்நாத் ஆகியோருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டன.
அதன்பேரில் தேடப்பட்டு வந்தவர் தற்போது சிக்கியுள்ளார். 60 வயதான தயாசிங் என்பவரை போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story






