மணிப்பூரில் மேலும் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜினாமா


மணிப்பூரில் மேலும் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜினாமா
x

கோப்புப்படம்

மணிப்பூரில் மேலும் ஒரு பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தார்.

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் யூரிபோக் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குவாய்ரக்பாம் ரகுமனி. இவர், மணிப்பூர் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை தலைவராக பதவி வகித்துவந்தார்.இந்நிலையில் அந்த பதவியில் இருந்து குவாய்ரக்பாம் நேற்று ராஜினாமா செய்தார்.

முதல்-மந்திரி பிரேன் சிங்குக்கு அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில், பொதுநலன் கருதியும், தனிப்பட்ட காரணங்களாலும் தான் இந்த பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இந்த மாதம், மணிப்பூர் ஆளும் பா.ஜ.க. கட்சி எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ஏற்கனவே தங்கள் நிர்வாக பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.அவர்களில் இருவர், எந்தப் பொறுப்பும் கொடுக்கப்படவில்லை என்பதை காரணமாக கூறியுள்ளனர்.

ஒருவர், சொந்த காரணங்களால் ராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்தார். இவ்வாறு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து நிர்வாக பதவியை துறந்து வருவது, ஆளும் கட்சியில் பிரச்சினை என்ற பேச்சை எழுப்பியுள்ளது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய முதல்-மந்திரி பிரேன் சிங், கட்சிக்குள் எந்த நெருக்கடியும் இல்லை என தெரிவித்தார்.


Next Story