டெல்லி துணை முதல்-மந்திரி வெளிநாடு செல்ல தடையா? ஆம் ஆத்மி-பா.ஜனதா இடையே மோதல்


டெல்லி துணை முதல்-மந்திரி வெளிநாடு செல்ல தடையா? ஆம் ஆத்மி-பா.ஜனதா இடையே மோதல்
x

மதுபான உரிமம் முறைகேடு ெதாடர்பாக டெல்லி துைண முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டாக வெளியான தகவலால் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜனதா இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

சி.பி.ஐ. சோதனை

டெல்லி கெஜ்ரிவால் அரசில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து வரும் மணீஷ் சிசோடியா, கல்வி, ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளை கவனித்து வருகிறார். அங்கு மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.

குறிப்பாக, மதுபான உரிமங்கள் பெற்றவர்களுக்கு திட்டமிட்டு ஆதாயங்கள் அளிக்கப்பட்டதாகவும், ஆயத்தீர்வை சட்டம் மற்றும் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., மணீஷ் சிசோடியா, ஆயத்தீர்வை முன்னாள் ஆணையர் அரவா கோபி கிருஷ்ணா மற்றும் 2 அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட 31 இடங்களில் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தியது.

இந்த விவகாரத்தில் மணீஷ் சிசோடியா உள்பட 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சோதனை மற்றும் வழக்குகளால் ெகஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. மணீஷ் சிசோடியாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.

லுக்-அவுட் நோட்டீஸ்

இந்த நிலையில் மதுபான உரிமம் முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள 8 பேருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீசை சி.பி.ஐ. நேற்று வெளியிட்டது. அவர்கள் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் மணீஷ் சிசோடியா உள்பட 4 பேருக்கு எதிராக இந்த நோட்டீஸ் வெளியிடப்படவில்லை. அரசுக்கு தெரிவிக்காமல் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்பதால் இதற்கான தேவை எழவில்லை என சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் தனக்கு எதிராக சி.பி.ஐ. லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளதாக மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார். தனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் கைப்பற்றவில்லை என டுவிட்டரில் கூறியிருந்த அவர், ஆனால் டெல்லியில் சுதந்திரமாக திரியும் தனக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னை கண்டுபிடிக்க முடியவில்லையா? என பிரதமர் மோடிக்கும் கேள்வி எழுப்பினார்.

ெகஜ்ரிவால் குற்றச்சாட்டு

இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்து உள்ளது. இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன.

அந்தவகையில் ஆம் ஆத்மியின் தலைமை செய்தி தொடர்பாளர் சவுராப் பரத்வாஜ் கூறுகையில், 'மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீசை வெளியிட்டு, அதை செய்தி நிறுவனங்களுக்கும் வழங்கி இந்த நாளை மோடி அரசு தொடங்கி இருக்கிறது. இது ஒரு தீவிரமான பிரச்சினை' என்று கூறினார்.

இதைப்போல, மாநில அரசுகளுடன் இணைந்து வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசிக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, ஒட்டுமொத்த நாட்டுடனும் மத்திய அரசு போரிடுவதாக கெஜ்ரிவாலும் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு தினமும் காலையில், சி.பி.ஐ, அமலாக்கத்துறை விளையாட்டை தொடங்குவதாகவும் சாடியுள்ளார்.

பா.ஜனதா பதிலடி

இதற்கு பதிலடி ெகாடுத்துள்ள பா.ஜனதா, ெகஜ்ரிவால் பதற்றத்தில் இருப்பதாக கூறியுள்ளது.

இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறுகையில், 'உங்களைப்பார்த்து யாரும் அஞ்சவில்லை கெஜ்ரிவால் ஜி. ஊழலின் முடிச்சுகள் அவிழ்ந்து வருவதால், கைவிலங்குகள் நெருங்கி வருகின்றன. நீங்கள் எவ்வளவு பதற்றமாக இருக்கிறீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்' என ெதரிவித்தார்.

ஆயத்தீர்வை கொள்கை ஊழலின் வேர்கள் கெஜ்ரிவாலின் வீட்டு வாசல் வைர நீள்வதாக கூறிய அவர், கெஜ்ரிவால் உட்பட யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றும், ஊழல்வாதிகள் யாரும் தப்பிக்க மாட்டார்கள் என்றும் உறுதிபட தெரிவித்தார்.


Next Story