மதுபான முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் மணீஷ் சிசோடியாவிற்கு ஒருநாள் ஜாமீன்


மதுபான முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் மணீஷ் சிசோடியாவிற்கு ஒருநாள் ஜாமீன்
x

மதுபான முறைகேடு வழக்கில் சிறையில் இருக்கும் மணீஷ் சிசோடியாவிற்கு நாளை ஒருநாள் ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்-மந்திரியாக இருந்தவர் மணிஷ் சிசோடியா. மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன் , 8 மணி நேர விசாரணைக்கு பிறகு இவரை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து ஜாமீன் கேட்டு இவர் மனு அளித்திருந்தார்.

இந்தநிலையில் கேட்ட கேள்விகளையே சிபிஐ மீண்டும் மீண்டும் கேட்பதாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்படுவதாகவும் ஜாமீன் மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. மணீஷ் சிசோடியா சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்பதால் ஜாமீன் வழங்க முடியாது என் கூறியது.

இதனிடையே ஜாமீன் தொடர்பான டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெல்லியின் முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் மணீஷ் சிசோடியாவுக்கு ஒருநாள் ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது மனைவியை சந்திக்க நாளை ஒருநாள் மட்டும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வர மட்டும் ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story