நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயர்வு

கோப்புப்படம்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023-24 நிதியாண்டின் 2-வது காலாண்டில் உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
ஒரு நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி) அளவை பொறுத்து, அதன் பொருளாதாரத்தின் நிலை குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இரண்டாவது காலாண்டில் அதாவது ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.6% வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது பொருளாதார ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளை விட அதிகம் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) நேற்று வெளியிட்ட தரவு காட்டுகிறது.
குறிப்பாக, சிமெண்டு, நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் ஆகிய துறைகள் அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டின் 2-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






