மராட்டியம்: பா.ஜ.க. எம்.பி. கிரீஷ் பபத் உடல்நல குறைவால் காலமானார்


மராட்டியம்: பா.ஜ.க. எம்.பி. கிரீஷ் பபத் உடல்நல குறைவால் காலமானார்
x
தினத்தந்தி 29 March 2023 2:25 PM IST (Updated: 29 March 2023 2:31 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் பா.ஜ.க. எம்.பி. கிரீஷ் பபத் உடல்நல குறைவுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலமானார்.

புனே,

மராட்டியத்தின் புனே நகர தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. கிரீஷ் பபத். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், தீனானாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதன்பின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். தொடர்ந்து, உயிர் காக்கும் சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது.

எனினும், அவருக்கு அளித்து வந்த சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அவர் புனே நகர தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது மறைவை பா.ஜ.க. புனே நகர தலைவர் ஜெகதீஷ் முலிக் டுவிட்டரில் இன்று உறுதி செய்து உள்ளார். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெறும் என அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story