மராட்டியம்: 9 மாதங்களில் 62 பேரின் உயிரை காப்பாற்றிய ரெயில்வே போலீசார்


மராட்டியம்:  9 மாதங்களில் 62 பேரின் உயிரை காப்பாற்றிய ரெயில்வே போலீசார்
x

மராட்டியத்தில் நடப்பு ஆண்டின் கடந்த 9 மாதங்களில் 62 பேரின் உயிரை ரெயில்வே போலீசார் காப்பாற்றியுள்ளனர்.



புனே,


மராட்டியத்தில் ஜீவன் ரக்சக் என்ற திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டின் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில் 62 பேரின் உயிரை ரெயில்வே போலீசார் காப்பாற்றியுள்ளனர்.

அவர்கள் ரெயில்வே சொத்துகளை பாதுகாக்கும் பணியுடன் கூட ரெயில்வே பணியாளர்களின் உதவியுடன் பயணிகளின் வாழ்வையும் பாதுகாத்து வருகின்றனர். இந்த பணியில் தங்களது சொந்த உயிரையும் துச்சமென மதித்து அவர்கள் முன்களத்தில் செயலாற்றுகின்றனர்.

இதுவரை காப்பாற்றப்பட்ட 62 உயிர்காக்கும் சம்பவங்களில், 24 சம்பவங்கள் மும்பை மண்டலத்தில் மட்டுமே பதிவாகி உள்ளன. 14 சம்பவங்கள் நாக்பூர் மண்டலத்திலும், 12 புனே மண்டலத்திலும் பதிவாகி இருக்கின்றன.

இதேபோன்று 8 சம்பவங்கள் பூசாவல் மண்டலத்திலும், 4 சம்பவங்கள் சோலாப்பூர் மண்டலத்திலும் பதிவாகி உள்ளன.

தீவிர வன்முறை, ரெயில் இயக்கத்திற்கு இடையூறு, பயணிகளுக்கு எதிரான குற்றங்கள், காணாமல் போன குழந்தைகளை மீட்பது மற்றும் ரெயில்கள் மற்றும் ரெயில்வே வளாகங்களில் கடத்தப்படும் போதை பொருட்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட சவாலான பணிகளை மேற்கொண்டு ரெயில்வே சொத்துகளை பாதுகாக்கும் பணியை அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.

ஓடும் ரெயிலில் ஏறும்போதோ அல்லது இறங்கும்போதோ கவனக்குறைவால் பல பயணிகள் ஆபத்துகளை சந்திக்கும் சம்பவங்களில் இருந்து பெருமளவில், அவர்களை ரெயில்வே போலீசார் மீட்கும் நிகழ்வுகள் நடந்து உள்ளன. தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சில நபர்களையும் அவர்கள் காப்பாற்றி உள்ளனர்.


Next Story