நமது குருக்களின் ஆசிகள் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லட்டும் - பிரதமர் மோடி குரு பூர்ணிமா வாழ்த்து


நமது குருக்களின் ஆசிகள் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லட்டும் - பிரதமர் மோடி  குரு பூர்ணிமா வாழ்த்து
x

குருபூர்ணிமா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

ஆடி மாதத்தில் வரும் பவுர்ணமியானது குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் தனக்கு கல்வி புகட்டிய, வழிகாட்டிய குருமார்களை போற்றும் விதமாக குரு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டிற்கான குரு பூர்ணிமா இன்று கொண்டாடப்படுகிறது.

குருபூர்ணிமா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் " குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள். நம்மை ஊக்கப்படுத்தி, வழிகாட்டி, வாழ்க்கையைப் பற்றி எமக்கு பலவற்றைக் கற்றுத் தந்த அனைத்து முன்மாதிரியான குருக்களுக்கும் நன்றியைத் தெரிவிக்கும் நாள் இது, நமது சமூகம் கற்றலுக்கும் ஞானத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. நமது குருக்களின் ஆசிகள் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லட்டும்."என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story