நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி இல்லையென்றால் சில கட்சிகளால் வெற்றி பெற முடியாது என்பதையே இதுபோன்ற வதந்திகள் காட்டுவதாக மாயாவதி கூறினார்.
லக்னோ:
நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என தகவல் பரவிய நிலையில், அதை கட்சியின் தலைவர் மாயாவதி மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
வரும் மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காது என பலமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதுபோன்ற வதந்திகள் தினமும் பரப்பப்படுகின்றன. பகுஜன் சமாஜ் கட்சி இல்லையென்றால் சில கட்சிகளால் வெற்றி பெற முடியாது என்பதையே இது காட்டுகிறது.
சமூகத்தின் நலனை கருத்தில் கொண்டு, குறிப்பாக ஏழைகள், சுரண்டப்பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனது சொந்த பலத்தில் தனித்து போட்டியிடுவதே பகுஜன் சமாஜ் கட்சியின் முடிவு.
இவ்வாறு மாயாவதி கூறி உள்ளார்.
Related Tags :
Next Story