கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே புதிய வழித்தடத்தில் முதல் நாளில் மெட்ரோ ரெயிலில் 16 ஆயிரம் பேர் பயணம்


கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே புதிய வழித்தடத்தில் முதல் நாளில் மெட்ரோ ரெயிலில் 16 ஆயிரம் பேர் பயணம்
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:46 PM GMT)

கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே புதிய வழித்தடத்தில் முதல் நாளில் மெட்ரோ ரெயிலில் 16 ஆயிரம் பேர் பயணித்ததாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே புதிய வழித்தடத்தில் முதல் நாளில் மெட்ரோ ரெயிலில் 16 ஆயிரம் பேர் பயணித்ததாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரெயில்

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மெட்ரோ நிர்வாகம் சார்பில் கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையேயான வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி பிரதமர் மோடி கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து நாட்டின் பெரிய மெட்ரோ சேவை இணைப்பு கொண்ட நகரங்களில் ஒன்றாக பெங்களூரு உருவெடுத்தது. பிரதமர் மோடி தொடங்கி வைத்ததையடுத்து நேற்று முன்தினம் முதல் பயணிகள் சேவைக்கு அனுமதிக்கப்பட்டது.

ஐ.டி. ஊழியர்கள்

இந்த நிலையில் சேவை தொடங்கிய முதல் நாளில், 16 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 12 ரெயில் நிலையங்களை கொண்ட புதிய மெட்ரோ வழித்தடத்தில் ஐ.டி.ஊழியர்கள் குடியிருப்புகள் அதிகம் உள்ளது. தற்போது அவர்கள் வேலை உள்ளிட்ட பணிகளுக்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில்களை பயன்படுத்த முடிகிறது என கூறப்படுகிறது.

எனினும் கே.ஆர்.புரம்-பையப்பனஹள்ளி இடையே மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பையப்பனஹள்ளிக்கு வருபவர்கள் வசதிக்காக கே.ஆர்.புரம்-பையப்பனஹள்ளி இடையே பி.எம்.டி.சி. சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் 2 ரெயில் நிலையங்கள் இடையேயான போக்குவரத்து மேம்படுத்தப்பட்டுள்ளது. 5 முதல் 10 நிமிடங்கள் என்ற முறையில் பி.எம்.டி.சி. பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பயனடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.


Next Story