குடியரசு தின விழா: டெல்லியில் அதிகாலை 4 மணிக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்


குடியரசு தின விழா: டெல்லியில் அதிகாலை 4 மணிக்கு மெட்ரோ ரெயில்  சேவை தொடக்கம்
x

குடியரசு தின விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு வசதியாக அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், குடியரசு தின விழாவன்று டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குடியரசு தின விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு வசதியாக அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க உள்ளது.

மேலும், 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என காலை 6 மணி வரை ரெயில்கள் இயங்கும். காலை 6 மணிக்குப் பிறகு வழக்கமான அட்டவணையின் கீழ் செயல்படும் எனவும் எனவும் மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.


Next Story