மிலாடி நபி - பிரதமர் மோடி வாழ்த்து!


மிலாடி நபி - பிரதமர் மோடி வாழ்த்து!
x

மிலாடி நபியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று மிலாடி நபி திருநாளைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், முகமது நபியின் பிறந்தநாளான மிலாடி நபியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "அனைவருக்கும் மிலாடி நபி நல்வாழ்த்துக்கள். நம் சமூகத்தில் சகோதரத்துவமும் கருணையும் வளரட்டும். அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். ஈத் முபாரக்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story