ராஜீவ் அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை அளித்தது பற்றி பேசாதது ஏன்? - ராகுல்காந்திக்கு மத்திய மந்திரி கேள்வி


ராஜீவ் அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை அளித்தது பற்றி பேசாதது ஏன்? - ராகுல்காந்திக்கு மத்திய மந்திரி கேள்வி
x

கோப்புப்படம்

ராஜீவ் அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை அளித்தது பற்றி பேசாதது ஏன் என ராகுல்காந்திக்கு மத்திய மந்திரி கேள்வி எழுப்பி உள்ளார்.

ஐதராபாத்,

மத்திய மந்திரி அனுராக் தாக்குர், ஐதராபாத் சென்றார். ஐதராபாத் அருகே கட்டப்பட்டுள்ள சர்வதேச விளையாட்டு மையத்தை திறந்து வைத்தார். அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அனுராக் தாக்குர் கூறியதாவது:-

ராகுல்காந்தி எப்போதும் சீனாவைப் பற்றி பேசுகிறார். ஆனால், அவரது குடும்பத்துக்கு சொந்தமான ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு சீனா அளித்த நன்கொடை பற்றி அவர் எதுவும் பேசுவது இல்லை. அந்த நன்கொடை பற்றி கேட்ட கேள்விக்கு அவர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. சீனா நமது எல்லை பகுதியை ஆக்கிரமிக்க முயன்றபோது, அவர் சீன அதிகாரிகளுடன் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதற்கும் இதுவரை பதில் அளிக்கவில்லை.

சீன ஆக்கிரமிப்புக்கு நமது பாதுகாப்பு படைகள் உரிய பதிலடி கொடுக்கும்போது, நமது படைகளை ராகுல்காந்தி இழிவுபடுத்துகிறார். இந்திய படைகள் நடத்திய துல்லிய தாக்குதல் குறித்து ராகுல்காந்தியும், அவருடைய கட்சியினரும் சந்தேகம் எழுப்புகிறார்கள். படையினரின் மனஉறுதியை சீர்குலைக்க பார்க்கிறார்கள். இந்திய படைகளை இழிவாக காட்டும் போக்கை காங்கிரஸ் இன்னும் கைவிடவில்லை என்று அவர் கூறினார்


Next Story