டெல்லியில் அடிக்கடி தங்களை அடித்து பணம் பறித்த இளைஞரை குத்திக்கொலை செய்த சிறுவர்கள்


டெல்லியில் அடிக்கடி தங்களை அடித்து பணம் பறித்த இளைஞரை குத்திக்கொலை செய்த சிறுவர்கள்
x

டெல்லியில் 3 சிறுவர்கள் அடிக்கடி தங்களை தாக்கி மதுபானம் வாங்குவதற்காக பணம் பறித்த 30 வயது இளைஞரை கத்தியால் குத்தி கொன்றனர்.

புதுடெல்லி,

மேற்கு டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் 3 சிறுவர்கள் அடிக்கடி தங்களை தாக்கி மதுபானம் வாங்குவதற்காக பணம் பறித்த 30 வயது இளைஞரை கத்தியால் குத்தி கொன்றனர்.

நேற்று இரவு 8:24 மணியளவில், சஞ்சய் காந்தி மருத்துவமனையில் ஒரு நபர் கடுமையான கத்திக்குத்து காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரியால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மருத்துவமனைக்குச் சென்றபோது, ​​​​அந்த நபர் மார்பு மற்றும் உடலின் பிற பகுதிகளில் பல கத்திக் காயங்களுடன் சுயநினைவின்றி இருப்பதைக் கண்டனர்.

சுல்தான்புரி லேபர் காலனியில் வசிக்கும் அஜய் என்ற அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய சகோதரி கூறும்போது, அவர்களுடைய பக்கத்து வீட்டுக்காரரின் மகன், அவனுடைய இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து அஜய்யை கத்தியால் குத்தியதாக கூறினார்.

மேலும் விசாரணையில், அஜய் மது அருந்துவதற்காக சிறுவர்களிடம் பணம் பறிப்பதும், அவர்களை அடிக்கடி அடித்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 302 (கொலை) மற்றும் 34 (பொது நோக்கம்) ஆகியவற்றின் கீழ் ராஜ் பார்க் காவல் நிலையத்தில் மூன்று சிறுவர்களுக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story