கலவை எந்திரம் மின் கம்பியில் உரசியது- 3 சாலைப்பணியாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு


கலவை எந்திரம் மின் கம்பியில் உரசியது- 3 சாலைப்பணியாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு
x

தாழ்வாக சென்ற உயரழுத்த மின்கம்பி மீது அந்த எந்திரம் எதிர்பாராவிதமாக உரசியது.

ராய்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் சக்தி அருகே கமாரியா கிராமத்தில் சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்தது. மாலையில் தொழிலாளர்கள் சிலர் சாலை அமைக்க பயன்படுத்திய கலவை எந்திரம் ஒன்றை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது அங்கே தாழ்வாக சென்ற உயரழுத்த மின்கம்பி மீது அந்த எந்திரம் எதிர்பாராவிதமாக உரசியது.

இந்த விபத்தில் மின்சாரம் பாய்ந்து 3 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.

1 More update

Next Story