ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு


ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு
x

ஓடும் ரெயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போபால்,

ஓடும் ரெயிலில் அத்துமீறலில் ஈடுபட்டு பெண்ணுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்ததாக மத்தியபிரதேசத்தை சேர்ந்த 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) கூறப்பட்டுள்ளதாவது,

மத்தியபிரதேசத்தின் கோட்மா தொகுதி எம்.எல்.ஏ. சுனில் சரப் மற்றும் சத்னா தொகுதி எம்.எல்.ஏ. சித்தார்த் குஷ்வாஹா (காங்கிரஸ்) ஆகிய இருவரும் நேற்று ரிவான்ஷல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏசி வகுப்பில் பயணித்துள்ளனர். கர்னி ரெயில் நிலையத்தில் இருந்து ஏறிய 2 பேரும் மதுபோதையில் இருந்துளனர்.

ரெயிலில் 2 எம்.எல்.ஏ.க்கள் பயணித்த அதே ஏசி வகுப்பில் ஒரு பெண் தனது குழந்தையுடன் பயணித்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் தனது கணவருக்கு போன் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். அதன் பின் அந்த பெண்ணின் கணவர் ரெயில்வே அமைச்சகம் மற்றும் ரெயில்வே போலீசை டேக் செய்து தொடர்ந்து டுவிட்டரில் சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து டுவிட் செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story