மோடி பதவியேற்பு விழா; மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பு?


மோடி பதவியேற்பு விழா; மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பு?
x

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆண்டு வந்த பா.ஜ.க.வுக்கு இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை(272 இடங்கள்) கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 240 இடங்களை மட்டுமே பா.ஜ.க. கைப்பற்றியது. அதே சமயம் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து 3-வது முறை இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். அவரது பதவியேற்பு விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 7.15 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இன்று காலை ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து மோடியின் பதவியேற்பு விழாவிற்கான அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அடிப்படையில் மோடியின் பதவியேற்பு விழாவில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் காங்கிரஸ் கட்சி இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story