மோடி பொதுக்கூட்டத்தில் குண்டு வெடித்த வழக்கு: பாட்னாவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரின் வீடுகளில் இன்று தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது.
பாட்னா,
கடந்த 2013-ம் ஆண்டு பீகாரின் பாட்னாவில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டம் அருகே குண்டு வெடித்தது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் நால்வருக்கு பாட்னாவில் உள்ள சிறப்பு தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்த நிலையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரின் வீடுகளில் இன்று தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தி வருகிறது. பாட்னாவில் முகமது சினான், இக்பால், சர்பாஸ் நவாஸ், நெவுபல் ஆகியோர் வீடுகளில் இந்த சோதனை நடந்தது. இவர்கள் வெடிகுண்டுகளை வைப்பதற்கு நிதியுதவி செய்ததாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story