'அடுத்த ஆண்டு மோடி தனது வீட்டில் கொடியேற்றுவார்' - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே


அடுத்த ஆண்டு மோடி தனது வீட்டில் கொடியேற்றுவார் - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
x

வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் மக்களின் கைகளில் இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

புதுடெல்லி,

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி அடுத்த ஆண்டு மீண்டும் செங்கோட்டையில் கொடியேற்றுவேன் என தெரிவித்தார்.

பிரதமரின் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும் மக்களின் கைகளில் இருப்பதாகவும், மீண்டும் செங்கோட்டையில் கொடியேற்றுவேன் எனக் கூறியது பிரதமரின் ஆணவத்தைக் காட்டுவதாகவும் தெரிவித்தார்.

சுதந்திர தின உரையில் கூட எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்பவரால் எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று கேள்வி எழுப்பிய மல்லிகார்ஜுன கார்கே, அடுத்த ஆண்டு மோடி நிச்சயம் கொடியேற்றுவார் என்றும், தனது வீட்டில் இருந்தபடி அவர் கொடியேற்றுவார் என்றும் தெரிவித்தார்.


Next Story