கேரளாவில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு காய்ச்சல் பாதிப்பு - 96 பேருக்கு டெங்கு உறுதி
ஒரே நாளில் 12,965 பேர் காய்ச்சல் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல வகை காய்ச்சல் பாதிப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் காய்ச்சல் பாதிப்பால் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 12,965 பேர் காய்ச்சல் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றதாகவும், இதில் 96 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 5 பேர் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த நிலையில், 239 பேருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் அதிக காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story