2 குழந்தைகளின் தாய்க்கு கணவரின் நண்பர் பாலியல் வன்கொடுமை; முத்தலாக் கொடுத்த கணவர்


2 குழந்தைகளின் தாய்க்கு கணவரின் நண்பர் பாலியல் வன்கொடுமை; முத்தலாக் கொடுத்த கணவர்
x

2 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கணவரின் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்த உடன் கணவர் முத்தலாக் கொடுத்த விவகாரத்தில் கணவரையும், நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.



போபால்,



மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் கவுதம் நகரில் வசித்து வரும் 2 குழந்தைகளுக்கு தாயான பெண்ணுக்கு 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த சில ஆண்டுகளாக பெண்ணின் கணவர் சின்ன சின்ன விசயங்களுக்காக அவரை துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்த சூழலில், கணவரின் நண்பர்களில் ஒருவர் அவரது வீட்டிற்கு வர தொடங்கியுள்ளார். ஒரு நாள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். கணவர், அவரது நண்பர் இருவரும் அந்த பெண்ணை துன்புறுத்தி உள்ளனர்.

இதனை தொடர்ந்து அவர் புதுடெல்லிக்கு சென்று விட்டார். ஆனால், அவரை இரண்டு பேரும் பின்தொடர்ந்துள்ளனர்.

இதன்பின் இந்தூருக்கு வந்த அந்த பெண் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். அங்கேயும் வந்த அந்த இருவர் தங்களுடன் வரும்படி அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். ஆனால், அந்த பெண் மறுத்து விட்டார். இதனால், பெண்ணின் கணவர் அவருக்கு முத்தலாக் கொடுத்து விட்டார்.

இதில் மனமுடைந்த அந்த பெண், இந்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர்கள் வழக்கு பதிவு செய்து கவுதம் நகர் போலீசாருக்கு அனுப்பினர். இதுபற்றி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு கவுதம் நகர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பெண்ணின் கணவர் மற்றும் கணவரின் நண்பரை கைது செய்தனர். அவர்கள் இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.


Next Story