திருப்பதி மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் - வனத்துறை எச்சரிக்கை
மலைப்பாதையில் செல்லும் பக்தர்கள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
திருப்பதி,
திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் இரண்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது. அதனை அவ்வழியாக சென்ற பக்தர்கள் வீடியோ பதிவு செய்த நிலையில், வனத்துறையினர் அங்கு சென்று யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் அவ்வபோது மலைப்பாதையில் காட்டு யானைகளின் நடமாட்டம் தென்படுவதால், அந்த வழியாக செல்லும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story