மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை - மீட்பு பணி தீவிரம்


மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை - மீட்பு பணி தீவிரம்
x

கோப்புப்படம்


மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தையை பத்திரமாக மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சத்தார்பூர்,

மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட லால்குவான் பாலி கிராமத்தை சேர்ந்த ரினா என்ற 3 வயது பெண் குழந்தை, நேற்று மாலையில் தனது வீட்டுக்கு அருகே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கே மூடப்படாமல் போடப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை திடீரென தவறி விழுந்தது.

இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் உள்ளிட்ட மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்கும் பணியை தொடங்கினர். 30 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

எனவே அருகில் குழித்தோண்டி குழந்தையை பத்திரமாக மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story