தொடர்ந்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் ரெயில் ; மாடு மீது மோதியதில் சேதம்


தொடர்ந்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் ரெயில் ; மாடு மீது மோதியதில் சேதம்
x
தினத்தந்தி 2 Dec 2022 7:30 AM IST (Updated: 2 Dec 2022 8:56 AM IST)
t-max-icont-min-icon

மும்பை செல்லும் வந்தே பாரத் ரெயில் நேற்று மாலை மாடு மீது மோதியதில் சிறிய சேதம் ஏற்பட்டது.

மும்பை,

காந்திநகர்-மும்பை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரெயில் நேற்று மாலை மாடு மீது மோதியது. இதனால் ரெயிலின் முன்பக்க பேனலில் சிறிய சேதம் ஏற்பட்டது. இந்த வழித்தடத்தில்ல வந்தே பாரத் ரெயில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இயக்கத் தொடங்கியது. இந்த நிலையில் ஏற்படும் நான்காவது சம்பவம் இதுவாகும்.

இதுகுறித்து மேற்கு ரெயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறும்போது, நேற்று மாலை 6.23 மணியளவில் குஜராத்தின் உத்வாடா மற்றும் வாபி இடையே லெவல் கிராசிங் கேட் எண் 87-க்கு அருகில் கால்நடை மீது ரெயில் மோதியது.

இதனால் ரெயிலின் முன்பகுதியில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. எந்த செயல்பாட்டு சிக்கல்களும் இல்லை. இந்த சேதம் இரவு சரிசெய்யப்படும் என்று கூறினார். சிறிது நேரம் நிறுத்தப்பட்ட ரெயில் பின்னர் மாலை 6.35 மணிக்கு மீண்டும் பயணத்தைத் தொடங்கியது.


Next Story