மும்பை கட்டிட விபத்து; கட்டிட உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு


மும்பை கட்டிட விபத்து; கட்டிட உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு
x

மராட்டிய மாநில தலைநகர் மும்பை குர்லா பகுதியில் நேற்று அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

மும்பை,

மராட்டிய மாநில தலைநகர் மும்பை குர்லா பகுதியில் நேற்று அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மும்பையில் நேற்று பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக உரிய விசாரணைக்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த நிலையில், மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ததாக பிளாட் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கட்டிடம் வசிப்பதற்கு உகந்தது இல்லை, ஆபத்தானதாக மாறிவிட்டது என மும்பை மாநகராட்சி விடுத்த எச்சரிக்கையையும் மீறி பிளாட் உரிமையாளர்களான ரஜ்னி ரதோட், கிஷோர் சவான்,பாலகிருஷ்ண ரதோட் மற்றும் திலிப் விஸ்வாஸ் ஆகியோர் குடியிருப்பு கட்டிடங்களை குத்தகைக்கு விட்டுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 304(2) (மரணம் விளைவிக்காத குற்றம்) 308 (கொலையாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தைச்செய்ய முயற்சித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story