மும்பை: கல்லூரி மாணவி பலாத்காரம், படுகொலை; குற்றவாளியை தேடி சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி


மும்பை: கல்லூரி மாணவி பலாத்காரம், படுகொலை; குற்றவாளியை தேடி சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி
x

மும்பை விடுதி அறையில் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விடுதி பாதுகாவலரை தேடி சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மும்பை,

மராட்டியத்தின் தெற்கு மும்பை பகுதியில் சார்னி சாலையில் அமைந்த விடுதியில் இளம்பெண் ஒருவர் தங்கி இருந்து உள்ளார். 18 வயதுடைய இவர் மும்பை பாந்திரா பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவரை காணவில்லை என நேற்று மாலை 5 மணியளவில் தேடியுள்ளனர். அப்போது, விடுதியின் 4-வது தளத்தில் உள்ள அவரது அறை வெளிப்புறம் பூட்டப்பட்டு இருந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்து, போலீசார் விடுதிக்கு உள்ளே நுழைந்தபோது, அந்த மாணவி துணியால் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்து கிடந்து உள்ளார். இதன்பின் தடய அறிவியல் முறைப்படி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், விடுதியின் பாதுகாவலர் முக்கிய குற்றவாளி என தெரிந்தது. அவரை பிடிக்க சென்றபோது சார்னி சாலை அருகே இருந்த ரெயில் தண்டவாளத்தில் அவர் உயிரிழந்து கிடந்து உள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story