மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 363 புள்ளிகள் சரிவு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 363 புள்ளிகள் சரிவு
x

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 363.96 புள்ளிகள் சரிவடைந்து 52,797.32 புள்ளிகளாக உள்ளது.



மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 363.96 புள்ளிகள் சரிவடைந்து 52,797.32 புள்ளிகளாக உள்ளது. வாரத்தின் முதல் நாளான நேற்று இது 53,300 புள்ளிகளை கடந்து உயர்ந்து காணப்பட்டது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 116.55 புள்ளிகள் சரிந்து 15,715.50 புள்ளிகளாக உள்ளது. இது நேற்று 190 புள்ளிகள் உயர்ந்து அல்லது 1.21% அதிகரித்து 15,900 புள்ளிகளை கடந்திருந்தது.

எனினும், சென்செக்சில் மகிந்திரா அண்டு மகிந்திரா 1% அளவுக்கு லாபம் ஈட்டி காணப்படுகிறது. இதனை தொடர்ந்து டாக்டர் ரெட்டிஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உள்ளன.


Next Story