மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகள் உயர்வு


மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகள் உயர்வு
x

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகள் உயர்வடைந்து உள்ளது.


மும்பை,



மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகள் வரை உயர்வடைந்து 54,237 புள்ளிகளாக உள்ளது.

இதில், இன்போசிஸ், டெக் மகிந்திரா, இண்டஸ்இண்ட் வங்கி, டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் ஆகிய நிறுவனத்தின் பங்குகள் 2 சதவீதம் வரை உயர்ந்து லாபத்துடன் காணப்பட்டன. செயில், நால்கோ உள்ளிட்ட உலோக பங்குகளும் 2 சதவீதம் உயர்ந்துள்ளன.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு16,500 புள்ளிகளாக உயர்ந்து உள்ளது. இதன்படி, நிப்டி குறியீட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆயில் இந்தியா, ஓ.என்.ஜி.சி. மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் ஆகியவற்றின் பங்குகள் 11 சதவீதம் வரை உயர்ந்து லாபத்துடன் காணப்பட்டன.


Next Story