மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 1,400 புள்ளிகள் சரிவு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 1,400 புள்ளிகள் சரிவடைந்து 52,881 புள்ளிகளாக உள்ளது.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், சென்செக்ஸ் குறியீடு 1,400 புள்ளிகள் வரை சரிவடைந்து 52,881 புள்ளிகளாக காணப்பட்டது.
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடும் 413 புள்ளிகள் சரிவடைந்து 15,800 புள்ளிகளாக காணப்பட்டது. வார தொடக்கத்தின் முதல் நாளிலேயே பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், தொடர்ந்து காலை 10.15 மணி நிலவரப்படி சென்செக்ஸ் குறியீடு 1,495.92 புள்ளிகள் அல்லது 2.75 சதவீதம் சரிவடைந்து 52,810.86 புள்ளிகளாக உள்ளது.
இதனால், தகவல் தொழில் நுட்பம், ரியல் எஸ்டேட், பொது துறை வங்கிகள், தானியங்கி துறை, எண்ணெய் மற்றும் வாயு உள்ளிட்ட அனைத்து பங்கு வர்த்தகங்களும் 2 முதல் 3 சதவீதம் வரை சரிவடைந்து நஷ்டத்துடன் காணப்பட்டன.
Related Tags :
Next Story