ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை


ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை
x
தினத்தந்தி 15 Nov 2022 6:45 PM GMT (Updated: 15 Nov 2022 6:47 PM GMT)

பெங்களூருவில் ஆயுதங்களால் தாக்கி வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மச்சோஹள்ளி பகுதியில் ஒரு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் மாதநாயக்கனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த வாலிபரை மர்மநபர்கள் ஆயுதங்களால் தாக்கி கொன்றது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட வாலிபரின் பெயர், விவரம் தெரியவில்லை. கொலை சம்பவம் குறித்து மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story