நடத்தையில் சந்தேகப்பட்டு உயிருடன் எரித்து மனைவி கொலை


நடத்தையில் சந்தேகப்பட்டு உயிருடன் எரித்து மனைவி கொலை
x

துமகூருவில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார். பலத்த தீக்காயம் அடைந்த 3 பெண் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துமகூரு:

துமகூருவில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை உயிருடன் எரித்துக் கொலை செய்த டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார். பலத்த தீக்காயம் அடைந்த 3 பெண் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மனைவியின் நடத்தையில் சந்தேகம்

துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா மிடிகேசி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ராம ஆஞ்சனேயா. இவரது மனைவி சாந்தம்மா. இந்த தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். ராம ஆஞ்சனேயா டிராக்டர் டிரைவர் ஆவார். இந்த நிலையில், தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை ராம ஆஞ்சனேயா அடித்து, துன்புறுத்தி வந்தார். நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

பின்னர் நள்ளிரவில் வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது ராம ஆஞ்சநேயா, தனது மனைவி சாந்தம்மா மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். அந்த தீ மளமளவென அவரது உடலிலும், 3 குழந்தைகளின் உடலிலும் பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். சாந்தம்மா, குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தார்கள்.

கைது

ஆனாலும் சாந்தம்மா உடல் கருகி பரிதாபமாக இறந்து விட்டார். 3 பெண் குழந்தைகளும் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். அவர்கள் மதுகிரி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று, தற்போது பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்ககப்பட்டுள்ளனர். இதுகுறித்து மிடிகேசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராம ஆஞ்சனேயாவை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story